திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.03.2026)- அன்று பணி ஓய்வு பெறும், கிருஷ்ணன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், டவுண் காவல் நிலையம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீர் முகமது, மேலப்பாளையம் காவல் நிலையம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நடராஜன், சந்திப்பு போக்குவரத்து காவல் நிலையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், வெங்கடேசன், பாளை போக்குவரத்து காவல் நிலையம் ஆகியோரை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய் இ.கா.ப., நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து, பணி நிறைவு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். உடன் காவல் துணை ஆணையர்கள், வினோத் சாந்தாராம் (கிழக்கு), S.விஜயகுமார் (மேற்கு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















