திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர், முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் மற்றும் விருப்ப ஓய்வில் செல்லும் தலைமை காவலர், செல்வேந்திரன் ஆகிய மூவரும் சிறப்பான முறையில் பணியாற்றியதை திருநெல்வேலி பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு.V. பிரசண்ண குமார், இ.கா.ப., சான்றிதழ் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.சண்முகம் (CWC) உடனிருந்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















