தேனி: உலக பசி தினத்தை முன்னிட்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் பெரியகுளம் உட்கோட்டம் தென்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆதரவின்றி சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.K.முத்துகுமார் அவர்கள் தலைமையில் தென்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கி அவர்களின் பசியை தீர்த்தனர்.
மேலும் கொரோனா நோய்த்தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஆதரவற்றவர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றையும் வழங்கினர்.
தேனி மாவட்ட காவல்துறையின் இச் செயலை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.