திருநெல்வேலி: வடக்கு தாழையூத்து, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் (50). என்பவர் (05.02.2024) காலை தாழையூத்து போஸ்ட் ஆபிஸ் அருகே உள்ள SBI ATM ல் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அவருக்கு முன்னால் வந்த நபர் ஏடி.எம் கார்டை பயன்படுத்தி விட்டு பணத்தை எடுக்காமல் சென்றுள்ளார். பின்னர் பெருமாள் பணம் எடுக்க ஏடி.எம் அறைக்குள்ளே சென்ற போது ரூபாய் 8 ஆயிரம் பணம் ஏடி.எம் மிஷினில் வெளியே இருந்துள்ளது. இதனை அறிந்த பெருமாள் தாழையூத்து காவல் நிலையத்திற்கு வந்து ரூபாய் 8 ஆயிரம் பணத்தை நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் பெருமாள் என்பவரை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.