மதுரை: கொரோனா தொற்று பரவல் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட,ஏழை எளிய மக்கள், வீடுகள் இன்றி சாலையோரத்தில் வசிப்பவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு, மதுரை மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, அப்பன்திருப்பதி காவல்நிலைய எல்லை அழகர்கோவில் அருகே உணவின்றி இருந்து வரும் முதியவர்களுக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. ஜெயலட்சுமி அவர்கள், போலீசார் இணைந்து உணவு பொட்டலங்கள் வழங்கினார்.