திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், லயன்ஸ் டவுண் பகுதியை சேர்ந்த அந்தோணி ஜோசப் (68). என்பவருக்கு திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பகுதியில் 1 ஏக்கர் 66 செண்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை 1995 வது வருடம் நாடார் உவரியை சேர்ந்த குமரேசன் (66). என்பவர் போலி ஆவணம் தயார் செய்து வேறு நபருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து அந்தோணி ஜோசப் தனது நிலத்தை மீட்டு தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,இ.கா.பா.,விடம் மனு அளித்ததையடுத்து, மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர், சம்பத்திற்கு உத்தரவிட்டதின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், ஜென்சி மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் சோபியா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே குமரேசனை (13.11.2024) அன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்