நாமக்கல் : நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் டாகுர் இ.கா.ப.¸ அவர்கள் முன்னிலையில் கொல்லிமலை பகுதியில் சட்ட விரோதமாக வைத்திருந்த 66 நாட்டு துப்பாக்கிகளை பொது மக்கள் தானாக முன்வந்து ஒப்படைத்தனர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன மற்றும் திருடுபோன 160 செல்போன்கள் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. மேலும் வாகன சோதனையின் போது அரசால் தடைசெய்யப்பட்ட 2¸410 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.