அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராஜசேகர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர சோதனை செய்தபோது உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் திருச்சியை சேர்ந்த ரெத்தினகுமார் 29. பாப்புராஜ் 29. என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.