திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட இரயில்வே கேட் பகுதியில் 31.10.2022-ம் தேதி உதவி ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள், தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, இரு சக்கரவாகனத்தில் வந்த சிங்கநேரியை சேர்ந்த சங்கர்கணேஷ் 27. வேல்கண்ணன் 27.மற்றும் துரை @ வீரதுரை 32. ஆகியோரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி குற்றவாளிகளை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து உதவி ஆய்வாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டு 20 கிலோ 200 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தார். மேற்படி குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.