திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராக்காச்சி புரம் கோவில் அருகே நேற்று (29.01.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நத்தம் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் ஒருவரை சோதனை செய்தபோது, அவர் விற்பனை நோக்கில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நத்தம் N.கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (25). என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 1.120 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இவ்வகை கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
















