திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பழனி தைப்பூச திருவிழாவிற்கு சென்று விட்டு சென்னை செல்வதற்காக நின்று கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மாதவன்(39). என்பவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தகராறில் ஈடுபட்டு மிரட்டி அவர் அணிந்திருந்த செயின் மற்றும் கைச்செயின் 8.1/2 பவுன் தங்க நகையை பறித்து சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 5.1/2 பவுன் தங்க நகை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இது குறித்து நகர் DSP. கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு தஞ்சாவூர், திருவையாறு சேர்ந்த குமார் மகன் தினேஷ்(21). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 3 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















