தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மேல பாண்டவர்மங்கலம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த கனகராஜ் 40. கட்டட தொழிலாளியான இவர் இன்று இரவு தனது வீட்டின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள், கனகராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர்;. இதனை பார்த்த அவரது தாய் பார்வதி தடுக்க முயன்றுள்ளார்.
அதில் பார்வதிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி டி.எஸ். பி., திரு. உதயசூரியன் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கனகராஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த பார்வதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் உறவினர்கள், பாலமுருகன் வீட்டை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் குவி