மதுரை: சட்டமன்றத் தேர்தல்–2026ஐ முன்னிட்டு, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாநகர் காவல்துறையினர், துணை ராணுவப்படையினர், பறக்கும் படையினர் மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுவினர் இணைந்து மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
இந்த சோதனைகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெற்று, சட்டவிரோத செயல்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (வடக்கு) அவர்கள் உடனிருந்தார். தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற காவல்துறை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















