மதுரை: சட்டமன்றத் தேர்தல்–2026 ஐ முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக, மாநகரில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு, தேர்தல் நடைபெறும் நாளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், வாக்காளர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாக்களிக்க தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முழுமையாக மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். தேர்தல் பணிகள் அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் நடைபெற காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















