மதுரை: வருகின்ற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடைபெறவும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்யவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. அபிஷேக் தீக்சித் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, இன்று (12.04.2026) மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு சிறப்பு செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியில், தேர்தல் நேரத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத சூழ்நிலைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிக்கும் விதம் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, கலவர கூட்டங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, பொதுமக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்பதற்கான நடைமுறை வழிமுறைகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சி, தேர்தல் காலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க காவல்துறையின் தயார்நிலையை வெளிப்படுத்துகிறது.




















