மதுரை: நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடைபெறவும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்யவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர காவல்துறை சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டது. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. அபிஷேக் தீக்சித் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, இன்று (12.04.2026) மாநகர காவல்துறையினர் மற்றும் GSAP (Gujarat State Armed Police) இணைந்து B3-தெப்பக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பின் மூலம் பொதுமக்களுக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், அமைதியான மற்றும் சுதந்திரமான வாக்குப்பதிவை உறுதி செய்ய காவல்துறை தயாராக இருப்பதை வெளிப்படுத்தியது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















