மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த ஆயுதப்படை தலைமைக் காவலர் திரு.சந்துரு, காவல் கட்டுப்பாட்டு அறை தலைமை காவலர் திரு.ராஜசேகர் மற்றும் மேலவளவு காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு.பீர் முகமது ஆகியோர், (28.01.2026) முதல் (01.02.2026) வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 46வது தேசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். இதில் தலைமை காவலர் திரு. சந்துரு 100 மீட்டர் & 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் முதல் இடம், பெற்றார்.
மேலும் தலைமை காவலர் திரு.ராஜசேகர் 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்றார்.மேலும் முதல் நிலை காவலர் திரு.பீர் முகமது pole vault போட்டியில் முதல் இடம் பெற்றார். சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்ற தலைமைக் காவலர் மற்றும் முதல் நிலை காவலரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.B.K.அரவிந்த் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்கள்.
















