திருநெல்வேலி : நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (12-02-2024) ஆம் தேதி தென்மண்டல காவல்துறை தலைவர் Dr.N.கண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., அவர்கள், காவல் துணை ஆணையர்(கிழக்கு) திரு.ஆதர்ஷ் பசேரா இ.கா.ப., மற்றும் காவல் துணை ஆணையர் (மேற்கு) திருமதி.V.கீதா அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநகரத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் தேர்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.