விருதுநகர்: (19.02.2024) ம் தேதி தென்மண்டல காவல்துறைத் தலைவர் Dr.N.கண்ணன், இ.கா.ப அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டார். மேற்படி ஆய்வின் போது காவல் துணைக்கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் தங்களது காவல் பணியில் மிக கண்ணியத்துடன் நடந்து கொள்வது அவசியம் என்றும், தங்களது காவல் நிலைய சரகங்களில் பதிவாகும் கொலை, கொள்ளை, திருட்டு, போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் தனி கவனம் செலுத்தவும், வழக்குகள் மீது உடனடியாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கோரியும், சமூகத்தில் குற்றங்களில் எண்ணிக்கையை குறைக்க வேண்டி, தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும் அறிவுரைகள் வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்