தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் மகன் இம்மானுவேல் (19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ் (19) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று இரவு இம்மானுவேலை அவரது வீட்டு அருகில் வைத்து வெங்கடேஷ் மற்றும் அண்ணா நகர் 8வது தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (எ) ரமேஷ்குமார் (19), அண்ணாநகர் 1வது தெருவைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் பொன்ராஜ் (19), அண்ணாநகர் 7வது தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் பரமசிவம் (20) ஆகியோர் அந்த முன்விரோதம் காரணமாக இம்மானுவேலிடம் அவதூறாக பேசி கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இமானுவேல் இன்று அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ், ரஞ்சித்குமார் (எ) ரமேஷ்குமார், பொன்ராஜ் மற்றும் பரமசிவம் ஆகியோரை கைது செய்தார்.