மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வந்த முதல் நிலைக் காவலர் திரு. மோகனகண்ணன் என்பவர் கடந்த வாரம் மேலூர் காவல் நிலைய சரகம், கத்தப்பட்டி டோல்கேட் அருகே வாகனச் சோதனையில் செய்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்படி திரு. மோகன கண்ணன் அவர்களை இன்று 17. 08.2021-ம் தேதி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள், மேலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபாகரன் அவர்கள் உடன் நேரில் சென்று நலம் விசாரித்து, அவரின் மருத்துவ செலவுக்கு, மேலூர் உட்கோட்ட காவலர்கள் அளித்த உதவி தொகையான ரூ.1,25,000/-த்தை (ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம்) காவலரின் மனைவியிடம் நேரில் வழங்கினார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி