குமரி: அதிகாலையில் இருந்து பரபரப்பாக இயங்கும் கோட்டார்- கன்னியாகுமரி சாலையும் வெறிச்சோடியது. பார்வதிபுரம் மேம்பாலம் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டு சாலையில் வரும் ஒரு சில வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று முதல் ஒரு வாரத்திற்கு பால், மருந்தகங்கள் தவிர மீதமிள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மருத்துவ காரணங்களுக்காகவும், இறப்பு சடங்குகளுக்கு போகவும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகாலை முதல் மிகவும் பரபரப்பாக இயங்கும் கோட்டாறு மொத்த மளிகை கடை அமைந்திருக்கும் நாகர்கோவில்- கன்னியாகுமரி சாலை இன்று ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
நாகர்கோவில் வடசேரி, மீனாட்சிபுரம், கோட்டாறு, செட்டிக்குளம், பார்வதிபுரம் உட்பட முக்கியமான சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுவப்பட்டுள்ளனர்.