திருநெல்வேலி: தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மாரிராஜன் அவர்கள், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜு அவர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன் என்றும், தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன் எனவும், அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன் எனவும், இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.” என்று உறுதிமொழி ஏற்றனர்.