தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் கணேஷ்குமார் இருவரும் சேர்ந்து இரும்புக்கம்பி கடை நடத்தி வருகின்றனர்.
இந்த கடையில் கடந்த ஜீலை மாதம் 10ந்தேதி6 பேர் கொண்ட கும்பல் கடையின் இரும்பு தகடுகளை பிரித்து சுமார் 1 லட்சம் 50 ஆயிரம் மதிப்புள்ள 2 டன் இரும்புக்கம்பிகள் மற்றும் 4 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றது.
இது குறித்து மேற்கு காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டிவி காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன், நல்லதம்பி, ராஜா, சரவணன் ஆகிய 4 பேரையும் கடந்த ஜீலை மாதம் 24ந்தேதி போலீசார் கைது செய்து 2லட்சத்து 25 ஆயிர ரூபாயை போலீசார் கைபற்றினர்.