விருதுநகர் : விருதுநகர் அருகே ஆமத்தூர் பகுதியில் திருடு போன ரூ2 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்களை ஆமத்தூர் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் திரு.கார்த்திக், கூறுகையில் கடந்த ஒரு வருட காலத்தில் திருடு போன 14 செல்போன்களை ஐ.எம்.ஐ. எண்களைக் கொண்டு கண்டறிந்து அவைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.