திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, ராஜன் நகரை சேர்ந்த ரியாஸ் சலீம் என்பவருக்கு மர்ம நபர் வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி Credit Card Activation செய்து தருவதாக வாதியிடம் OTP பெற்று ரூ.59,033/- பணத்தை ஏமாற்றியதாகவும், சின்னாளப்பட்டி, பூஞ்சோலையை சேர்ந்த பாண்டியராஜ் என்பவருக்கு SBI KYC Update செய்ய வேண்டும் என்று OTP பெற்று ரூ.7,162/- பணத்தை ஏமாற்றியதாகவும் 2 பேரும் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.59,033/- மற்றும் ரூ.7,162/- பணத்தை மீட்டனர். இதனையடுத்து மாவட்ட எஸ்பி.பாஸ்கரன், புகார்தாரர்கள் ரியாஸ் சலீமிடம் ரூ.59,033/- மற்றும் பாண்டியராஜிடம் ரூ.7,162/- பணத்தை ஒப்படைத்தார்.