இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் திட்டக்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்து விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், புதிய சாலை போக்குவரத்து சிக்னல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஒழுங்கையான பயணத்தை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட இந்த போக்குவரத்து சிக்னலை, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ் இ.கா.ப. அவர்கள் திறந்து வைத்தார். போக்குவரத்து விதிகளை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி
















