திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக திரு. இளஞ்செழியன் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்பு நிகழ்வின் போது, காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர், சட்டம்–ஒழுங்கு பராமரிப்பு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுடன் நட்புறவு பேணுதல் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என ஆய்வாளர் இளஞ்செழியன் உறுதியளித்தார். மேலும், தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி, குற்றச் செயல்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















