அரியலூர்: கடலூர் மாவட்டம், இறையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா. இவர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது கைப்பையை தவறவிட்டார் உடனடியாக இது பற்றி அருகில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். அரியலூர் ரெயில் நிலையத்திற்கு அந்த ரெயில் வந்தபோது, ரெயில்வே பாதுகாப்பு படையினர் கவிதா பயணம் செய்த பெட்டியில் ஏறி பார்த்தனர். அப்போது கவிதாவின் கைப்பையை போலீசார் கைப்பற்றினர். மேலும் இது பற்றி கவிதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அரியலூருக்கு வரவழைக்கப்பட்டார். இதையடுத்து அவரிடம், 5 பவுன் சங்கிலி கைக்கடிகாரம் அடையாள அட்டை, சாவி, ரூ.2 ஆயிரத்து 500 ஆகியவை இருந்த கைப்பையை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.செல்வகுமார் ஒப்படைத்தார். மகிழ்ச்சியடைந்த கவிதா ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்தார்.