திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் அருகே உள்ள பிராகாசபுரத்தை சேர்ந்த அந்தோனிதாசன் 64. என்பவர் கடந்த 2014-ம் வருடம் அவரது தோட்டத்தில் விஷம் குடித்து இறந்துகிடந்தார். மேற்படி நபர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அந்தோணிதாசன் மருமகன் இராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இறந்த நபரின் மற்றொரு மருமகனான ஜீலியன் 47. என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி அந்தோணிதாசனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாதவும் அதனால் மனமுடைந்த அந்தோணி தாசன் விஷம் அருந்தி தற்கொலை செய்தது தெரியவந்தது. அதனால் மேற்படி குற்றவாளியை இராதாபுரம் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை வள்ளியூர் துணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று 09.11.2022-ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி திருமதி. வர்சத்பேகம், அவர்கள் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த இராதாபுரம் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.