திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் (05.12.2022)-ம் தேதி தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ராகார்க்., இ.கா.ப, அவர்கள் தலைமையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹரிகிரண் பிரசாத் , இ.கா.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் காவல் அதிகாரிகள் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கொலை சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும் , பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்வது குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.