திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பழனி தைப்பூச திருவிழாவிற்கு சென்று விட்டு சென்னை செல்வதற்காக நின்று கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மாதவன்(39). என்பவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தகராறில் ஈடுபட்டு தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 5.1/2 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இது குறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த (17). வயது சிறுவன் மற்றும் கோவை, கணபதியை சேர்ந்த விக்னேஷ்(19). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 5.1/2 பவுன் தங்க நகையை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















