தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்டம் வல்லநாடு அருகே உள்ள உள்ள வசவப்ப புரம் கிராமம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுடலை விவசாயியான இவருக்கு மனைவியும் மாலைராஜா வயது 20 என்ற மகனும் கவிதா வயது 17 என்ற மகளும் உள்ளனர்.கவிதா பிளஸ் டூ படித்துள்ளார் இந்தநிலையில் கவிதா தனது செல்போன் மூலம் விடிய விடிய கேம் விளையாடுவது பேஸ்புக்கில் ஷேர் செய்யவும் வாட்ஸ் அப்பில் மிம்ஸ் பண்னுவதும் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள். இதை அவரது அண்ணன் மாலைராஜா கண்டித்துள்ளார்.
பல தடவை கண்டித்தும் கவிதா பேஸ்புக்கில் விளையாடுவதை நிறுத்தவில்லை. இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அண்ணன் மாலை ராஜா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக தங்கை கவிதாவை வெட்டியுள்ளார்.
இதில் உடம்பு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது.இதில் ரத்த வெள்ளத்தில் கவிதா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார் பின்னர் அங்கிருந்து மாலை ராஜா தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் முரப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திரு.பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கவிதாவின் பிணத்தை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் திரு.ஜெய்குமார் தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி திரு.பொன்னரசு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே தப்பி ஓடிய மாலை ராஜாவை வல்லநாடு காட்டுப்பகுதியில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் வல்லநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.