கன்னியாகுமரி: புதுக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குஞ்சகோடு பகுதியில் கடந்த (06.01.2026) அன்று, விழுதயம்பலம் பகுதியை சேர்ந்த தங்ககண் என்பவருடைய மனைவி ஞானசெல்வம் (60). சானலில் குளித்துக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரது கழுத்திலிருந்த 5½ சவரன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக புதுக்கடை காவல் நிலையத்தில் குற்ற எண் 04/2026,U/S 304(2)ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின்படி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரேகா R. நங்லோட் IPS அவர்கள் மேற்பார்வையில் புதுக்கடை காவல் ஆய்வாளர் திரு.மாடசாமி, உதவி ஆய்வாளர் திரு. கார்த்திக் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுமார் 200 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், குளிவிளை புத்தன்வீடு, செருவல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கச்சன் என்பவரின் மகன்களான ஸ்ரீகுமார் @ ஜிஜின் (39). மற்றும் அனுமோன் (35). என்பவர்களை அடையாளம் கண்டு, கேரள மாநிலத்தில் வைத்து கைது செய்ததுடன் தங்கச் சங்கிலியை மீட்டனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
















