மதுரை: உசிலம்பட்டி அருகே நேற்று இரவு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை தாக்க முயற்சி. உடன் வந்த அதிமுக நிர்வாகி தினேஷ்குமார் மீது நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அமமுக நிர்வாகிகள் என கூறப்படும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பேரையூர் டிஎஸ்பி. துர்காதேவி தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி