திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் தரப்பில், சந்திப்பு ம.தி.தா. கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர், செல்வி சுவாதிகா, சமூக வலைதளம் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு மோசடிகள், அறிமுகமில்லாத நபர்கள் சமூக வலைதளத்தில் தொடர்புகொண்டால் எச்சரிக்கையாக இருப்பது, சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாளுவது போன்றவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினர். மேலும், இணையவழி மோசடி தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா எண். 1930 அல்லது இணைய வழியில் அளிக்கலாம் என அறிவுறுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















