நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் மானூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 32. இவர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சிகிச்சை பிரிவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது செல்போனை ராஜபாளையத்தை சேர்ந்த ஜோஸ்வா 28 என்பவர் திருடினார் இதைக்கண்ட அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் ஜோஸ்வாவை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திரு.அன்ன ராஜா வழக்குப்பதிவு செய்து ஜோஸ்வாவை கைது செய்து. அவரிடம் இருந்து செல்போன் மீட்கப்பட்டது.