அரியலூர்: அரியலூர் மாவட்டம், காவனூர் கிராமம் பொன்பரப்பினார் தெருவை சேர்ந்தவர் ஜோதிமுருகன் 32. இவர் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவரது செல்போனை காணவில்லை. அருகே இருந்த சிறுவனிடம் கேட்ட போது அந்த சிறுவன் திடீரென தப்பியோடிவிட்டார். ஜோதிமுருகன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் செல்போனை திருடியது தெரிந்தது. அந்த சிறுவனை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.