தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், அனைத்து சோதனை சாவடிகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரோந்து சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீரென முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசவப்பபுரம் சோதனைச் சாவடிக்குச் சென்று போலீசாரின் வாகன சோதனையை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
சோதனைச்சாவடியில் முறப்பநாடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுப்பையா தலைமையில் காவலர் திரு. முருகன் மற்றும் பெண் முதல் நிலைக் காவலர் முருகலெட்சுமி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.