விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் கோடை மழை பெய்தது. சிவகாசி பகுதிகளில் இன்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. வெட்கை, புழுக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென்று பலத்த காற்று வீசத்துவங்கியது. மேகங்கள் திரண்டு வந்து பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. புறநகர் பகுதிகள், செல்லையநாயக்கன்பட்டி, முதலிபட்டி, பெத்தலுபட்டி, நாரணாபுரம், சிவகாமிபுரம், திருத்தங்கல், கொங்கலாபுரம், தேவர்குளம், மல்லி, கார்த்திகைபட்டி உட்பட பல இடங்களிலும் பரவலா கோடை மழை பெய்தது. தற்போது கோடை உழவுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோடை மழை பெய்து வருவது விவசாயப் பணிகளுக்கு ஏற்றதாக உள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி