சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வைகைக் ஆற்றங்கரையோர பகுதியில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அர்ஜுனன் அவர்கள் ரோந்து சென்ற போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நாகேந்திரன் மீது பிரிவு 8(c) r/w.20(b),(ii)(b) NDPS Act -ன்படி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 1.200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் 27.09.2020 அன்று சிவகங்கை மாவட்ட திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல கரிசல்குளம் பகுதியில் சார்பு ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் ரோந்து சென்ற போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த லட்சுமி மீது பிரிவு 8(c) r/w.20(b),(ii)(b) NDPS Act -ன்படி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்த (26) வயது மதிக்கத்தக்கவர் 17 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து 20.09.2020 அன்று சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சித்திரைச் செல்வி, u/s 7 & 8 of POSCO Act & 506(i) IPC Act -ன் கீழ் வழக்கு பதிந்து 28.09.2020 அன்று கைது செய்து சிறையில் அடைத்தார்.