திருநெல்வேலி: மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே அண்ணா விளையாட்டு மைதானத்தில் சரியான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் கோலி குண்டு விளையாடி கொண்டிருந்த அன்னை இந்திரா நகரை சேர்ந்த சிறுவர்களை( 31-01-2024)ஆம் தேதி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., அவர்கள் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து விளையாடுவதற்கு தேவையான விளையாட்டு பொருட்களை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். மேலும் அவர்களை படிப்பிலும், விளையாட்டிலும் சரியாக செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி பாதையை அடைய வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்கள். உடன் பாளை சரக காவல் உதவி ஆணையர் திரு.பிரதீப் அவர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்துகொண்டனர்