திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலக்குண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (17). வயது சிறுமியை வீலிநாயக்கன்பட்டியை சேர்ந்த அருண்பாண்டி(25). என்பவர் ஒருதலையாக காதலித்தார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தன் காதலை ஏற்றுக்கொள்ள அருண்பாண்டி வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறுமி மறுக்கவே ஆத்திரமடைந்த அருண்பாண்டி சிறுமியின் கழுத்தை துப்பட்டா கொண்டு நெரித்துள்ளார். இதில் சிறுமி மயக்கம் அடைய அருண்பாண்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறுமி சிகிச்சைக்காக நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு அருண்பாண்டியனை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















