மதுரை: மதுரை கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் 40 இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக 2013-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமதி.ராதிகா குற்றவாளி முருகனுக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறையும் ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
முருகன் ஏற்கனவே மூன்று போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் தண்டனை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி