அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (22), இவர் அதே பகுதியைச் சேர்ந்த (17) வயது சிறுமியை கட்டாயப்படுத்தி தனது மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று தனி வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.சுமதி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், ஜெயக்குமார் சிறுமியை கடத்திச்சென்றது தெரிய வந்தது. குற்றவாளி ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.