கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், பொய்குணம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் பரமசிவம்@சிவகுமார் (52). என்பவர் (13). வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேற்கண்ட குற்றவாளி தொடர்ந்து இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடக் கூடும் என்பதால் அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டும், குற்றவாளி பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாலும், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.S மாதவன், அவர்கள் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு.எம்.எஸ்.பிரசாந்த் இ.ஆ.ப., அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி (09.10.2025)-ந் தேதி கடலூர் மத்திய சிறையில் உள்ள குற்றவாளிக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு சார்வு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைக்குக்கு எதிராக பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.