தூத்துக்குடி: விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மேலமாந்தை பகுதியில் 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் விளாத்திக்குளம் அனைத்து மகளிர்காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. மீராள்பானு தலைமையிலான போலீசார் விரைந்து சென்று
17 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டாலங்குளத்தைச் சேர்ந்த சர்க்கரை மகன் மாரிமுத்து (27), அவரது தந்தையான சிவனான்டி மகன் சர்க்கரை (56), தாயாரான சர்க்கரை மனைவி காமாட்சி (51), பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.