தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு பணி போன்ற இதர அலுவல்கள் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் அதிக அளவில் விசாரணை மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்ததாலும்,
இன்று ஞாயிற்றுக் கிழமை பெரும்பாலான புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் விசாரணைக்கு வர ஏதுவாக இருக்கும் என்பதாலும் இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
14 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களின் மனுக்களை விசாரணை செய்து சட்டப்படி உரிய தீர்வு காண காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மனு விசாரணை சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன்படி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜ் மஹாலில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது மவாட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்துள்ள புகார் மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் இன்று உடனடி தீர்வு காணும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் 14 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் பொதுமக்கள் அளித்துள்ள புகார்களுக்கு மனுதாரர் மற்றும் எதிர்மனுதார் ஆகிய இரு தரப்பினரையும் வரவழைத்து, சட்டத்திற்குட்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த முகாமில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஆனந்தராஜன், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் திரு.ஜெயப்பிரகாஷ், முத்தையாபுரம் காவல் நிலை ஆய்வாளர் திரு.ஜெயசீலன், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.