தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துப்பாஸ்பட்டி கண்மாய் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த குற்றவாளிகள் மூவரையும் கைது செய்து வழக்கின் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த தாளமுத்துநகர்
காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. பென்சிங், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் திரு. மாணிக்கராஜ், திரு. மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. சாமுவேல், தாளமுத்துநகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சுந்தர்சிங், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் திரு. செந்தில். திரு. திருமணிராஜன் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் திரு. முத்துப்பாண்டி ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 06.10.2021 அன்று புதியம்புத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்தின்பேரில் ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 1½ டன் இரும்பு கம்பிகளை புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிவைதானேந்தல் பகுதியில் இருந்து திருடியதை கண்டுபிடித்து 5 எதிரிகளை கைது செய்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மேற்படி ரூபாய். 1½ லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்ய உதவியாக இருந்தும்,
அதேபோன்று புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்து, விபத்திற்கு காரணமாக இருந்த அவரது இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றிய புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாலன், முதல் நிலை காவலர் திரு. சிவபெருமாள் மற்றும் திரு. ராஜ நாராயணமூர்த்தி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 04.10.2021 அன்று ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேம்பலாபாத் பேரூந்து நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 3 களை கைது செய்து அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் ரூபாய். 40,000/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. இன்னோஸ்குமார், முதல் நிலை காவலர்கள் திரு. மாணிக்கராஜ், திரு. இசக்கிமுத்து மற்றும் திரு. சாந்தகுட்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் ரூபாய். 90,000/- மதிப்பிலான 3 சவரன் நகைகளை மீட்டு குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துராமன், உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா, மணியாச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பொன் முனியசாமி, நாரைக்கிணறு காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. கொடிவேல், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. பிரபாகரன் மற்றும் கடம்பூர் காவல் நிலைய காவலர் திரு. விடுதலை பாரதிக்கண்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015ம் வருடம் நடைபெற்ற மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய். 1000/- அபராதம் பெற்று கொடுத்த விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. ராமர், காவலர் திரு. கோட்டிமுத்து மற்றும் மகிளா நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர் திருமதி. சுபாஷினி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2004ம் வருடம் கஞ்சா கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி கடந்த 12 வருடங்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் வைத்து கைது செய்து சிறையிலடைத்த மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மணிமாறன், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. பால்ராஜ், விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. மகேந்திரன் மற்றும் காடல்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. முத்துகாமாட்சி ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
காவல் ஆய்வாளர் உட்பட 29 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து அவர்கள் உடனிருந்தார்.