சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டம், ஆராவயல் காவல் நிலைய சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்க பிறகு எவ்வித அசம்பாவிதமின்றி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பாதுகாப்பு அலுவலில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கும், பள்ளத்தூர் காவல் நிலைய கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் இளையான்குடி, காரைக்குடி வடக்கு, அழகப்பாபுரம் காவல்நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்து சிறப்பாக பணிபரிந்த தேவகோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன், காரைக்குடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ், காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.இரவீந்திரன், தனிப்பிரிவு ஆய்வாளர் திரு.செல்வக்குமார், தேவகோட்டை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.சரவணன், தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.கணேசமூர்த்தி, தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கீதாலெட்சுமி,தனிபிரிவு சார்பு ஆய்வாளர் திரு.சரவணபோஸ், சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் திரு.முரகானந்தம் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் திரு.மலைச்சாமி, திரு.சரவணக்குமார், திரு.நமச்சிவாயம், திரு.ரூபன்ராஜ் உள்ளிட்ட 64 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்கள் பாராட்டும் விதமாக பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி